அங்க கை வைச்சு இங்கே கை வைச்சு கடைசியாக இலங்கை பாதுகாப்பில் கை வைக்கும் சீனா ! பதறும் இந்தியா !

விடுதலைபு புலிகளை அழிக்க ஏண்டா உதவினோம் என்று, நிமிடத்திற்கு நிமிடம் யோசிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா. ஒரு புறம் கொரோனா பெரும் தொற்று மறு புறம் புற்று நோய் போல பரவிவரும் சீனா. சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும், அன் நாட்டின் பெரும் சக்தி மிக்க நபருமான General Wei Fenghe இலங்கைக்கு 2 நாள் பயணமாக நேற்றைய தினம் வந்துள்ளார்.

கோட்டபாயவை இன்று சந்தித்துப் பேசிய சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கான பாதுகாப்பு உபகரணங்கள், ஆயுதங்கள், மற்றும் அனைத்து உதவிகளையும் சீனா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இவர்கள் இருவரும் சிறு பிள்ளைகள் போல கைகளை தூக்கி செய்யும் சைகையை வைத்தே சொல்ல முடியும், இவர்கள் இருவருக்கும் எப்படியான ஒரு நல்ல உறவு இருக்கும் என்று. இலங்கையின் பாதுகாப்பு விடையங்களில் இனி சீனா கை வைக்க ஆரம்பித்துள்ள விடையம், திருடனுக்கு தேள் கொட்டிய விதமாக உள்ளது. ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ள இந்திய மத்திய அரசுக்கு இது நல்ல செய்தி அல்ல.

Contact Us