விடுதலைப் புலிகளின் தலைவர் துப்பாக்கியால் பதிலளிக்க வேண்டி வந்தது ஏன் தெரியுமா? ராஜித அறிவு அவ்வளவுதான்!

வடக்கில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற ஜனநாயகவாதிகளை இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியதாலேயே, வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கியால் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற ஜனநாயகவாதிகளை இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றியதாலேயே, வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கியால் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் செயற்படும் ரிஷார்ட் பதியூதீன் போன்றவர்களை தேவையின்றி கைது செய்யும் பட்சத்தில், இறுதியில் பிரிவினைவாதத் தலைவர்களே எஞ்சியிருப்பார்கள் எனவும் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி கைது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பு தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரிஷார்ட் பதியூதீனுக்கு ஆதரவானவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ரிஷார்ட்டை விடுதலை செய்ய என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ரிஷார்ட் பதியூதீன் ஏன் கைது செய்யப்பட்டார், அவருக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு எவ்வி சாட்சிகளையும் முன்வைக்கவில்லை. அவர் இதற்கு முன்னர் 5 தடவைகள் குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததோடு அவரை விடுதலை செய்துள்ளது.

ரிஷார்ட் பதியூதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் தடுத்து வைத்திருந்து இறுதியில் அவருக்கும் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென பி அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.

யாருடைய நோக்கத்திற்காக கைது செய்யப்படுகின்றார்கள், மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்குவது யார்? ஒவ்வொருத்தர் கோரிக்கை விடுக்கையில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இடம்பெறும் கைதுகள் மனித உரிமை மீறலாகும்.

ரிஷார்ட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் போன்ற ஜனநாயகவாதிகள் கைது செய்யப்படும்போது, பிரிவினைவாதத் தலைவர்களே எஞ்சியிருப்பார்கள்.

வடக்கில் அமிர்தலிங்கம் போன்றோரை நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றியதும், ஜனநாயகவாதிகளுக்கு கருத்து வெளியிட வாய்ப்புகள் இல்லாமல்போனதும், இறுதியில் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கியூடாக பேசினார். இவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் நிகழாமல் இருக்கவே நாம் செயற்படுகின்றோம்.

Contact Us