டிப்பரை வழிமறித்து சாரதி மீது வாள்வெட்டு! வவுனியாவில் பெரும் பதற்றம்!

வவுனியா சோயாவீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயாவீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதி மீது வாளால் தாக்கிவிட்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Contact Us