ஸ்டேடியத்துல நீங்க கலக்குங்க, டான்ஸ்ல நாங்க கலக்குறோம்’… ‘நடனத்துல பிச்சு உதறிய சாஹலின் மனைவி’… வைரலாகும் வீடியோ!

பெங்களூரு அணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி நடனத்தில் தாயாருடன் சேர்ந்து வெளுத்து வாங்கிய வீடியோ வைரலானது.

Yuzvendra Chahal\'s wife Dhanashree Verma\'s dance video with mom

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சாஹல். கடந்த ஆண்டு டிசம்பரில் தனஸ்ரீ சர்மா என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. இதன்பின்னர் சமூக ஊடகங்களில் இந்த தம்பதி அதிகம் பேசப்பட்டனர்.  இவரது மனைவி தனது நடன திறமையால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார்.

Yuzvendra Chahal's wife Dhanashree Verma's dance video with mom

அதுபற்றிய வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.  இதனைப் பலர் பின்தொடருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச நடன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.  இதனை முன்னிட்டு தனஸ்ரீ தனது தாயாருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  அவர்கள் இருவரும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த டால் என்ற இந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியுள்ளனர்.

Yuzvendra Chahal's wife Dhanashree Verma's dance video with mom

இதற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us