பயோ பபுளில் கணவர்’.. ‘கண்ணாடியால் மூடப்பட்ட கேலரிக்குள் மனைவி’.. நெட்டிசன்களை உருக வைத்த போட்டோ..!

பயோ பபிளில் இருக்கும் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suryakumar Yadav shares an adorable kiss with his wife

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் டெல்லி அணியும், மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன. 6 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது.

Suryakumar Yadav shares an adorable kiss with his wife

4 புள்ளிகளுடன் கொல்கத்தா, பஞ்சாப், மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

Suryakumar Yadav shares an adorable kiss with his wife

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜாஸ் பட்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

Suryakumar Yadav shares an adorable kiss with his wife

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி, 18.3 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டி காக் 70 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Suryakumar Yadav shares an adorable kiss with his wife

இந்த நிலையில் போட்டி முடிந்த பின் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், தனது மனைவி தேவிஷா ஷெட்டியிடம் பேசினார். தற்போது அவர் பயோ பபுளில் இருப்பதால், கண்ணாடியால் மூடப்பட்டிருந்த தடுப்புக்கு நடுவே தனது மனைவிக்கு அன்பாக முத்தமிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Contact Us