கிரிக்கெட்ல ஜெயிச்சுட்டாரு!.. காதல்லயும் ஜெயிப்பாரா’?.. ‘ஆசை ஆசையாய் வாழ்த்திய தோழி’!.. க்ளீன் போல்டு ஆவாரா ப்ரித்வி ஷா?

சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் ப்ரித்வி ஷா அதிரடி காட்டியதை அடுத்து, அவரை வாழ்த்து அவரது தோழி பகிர்ந்த போஸ்ட் வைரலாகி வருகிறது.

ipl prithvi shaw girlfriend prachi singh laud his batting

ஐபிஎல்லின் நேற்றைய போட்டியில் கேகேஆர் அணியுடன் மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்களை அடித்திருந்தார் டெல்லி வீரர் பிரித்வி ஷா.

இந்நிலையில், அவரது காதலி என கூறப்படும் நடிகை ப்ராச்சி சிங், பிரித்வியை பாராட்டி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது. ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்மூலம் அந்த அணியின் தன்னம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை தந்துள்ளார் டெல்லி வீரர் பிரித்வி ஷா. 41 பந்துகளில் 82 ரன்களை அவர் குவித்துள்ளார். இதையடுத்து, போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் பெறும் இரண்டாவது ஆட்ட நாயகன் விருது இது.

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இவையெல்லாம் அவருக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்குமா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் அவரது காதலியாக கூறப்படும் ப்ராச்சி சிங் அவரை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

முதலில் அவர் போட்ட பதிவு, போட்டிக்கு பிறகு பிரித்வி ஷா செய்தியாளர்களிடம் பேசியது. இரண்டாவதாக பிரித்வி பெற்ற விருதுகளின் கொலாஜை ப்ராச்சி பகிர்ந்துள்ளார். முதல் பதிவில் ப்ரித்வியை நினைத்து தான் பெருமை கொள்வதாகவும், இரண்டாவது பதிவில் விருதுகளை பேக் செய்ய புதிய சூட்கேசை வாங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுகள் இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளன. இவர்கள் இருவர் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட எந்த தகவலும் இல்லை என்றாலும், தொடர்ந்து இவர்கள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ப்ராச்சி போட்டுள்ள பதிவு அவர்களது காதலை ரசிகர்கள் உறுதிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது.

Contact Us