இந்தியர்களை காப்பாற்ற விரைந்தன போர்க்கப்பல்கள்!

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆக்சிஜனை எடுத்துச் செல்ல தேவையான காலி டேங்கர்கள், வெளிநாடுகளில் இருந்து இந்திய விமானப்படை சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.

இந்தநிலையில், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் டேங்கர்களை கொண்டு வரும் பணியில் இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, பஹ்ரைன், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.

ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். தல்வார் ஆகிய 2 போர்க்கப்பல்கள், பஹ்ரைன் நாட்டின் மனாமா துறைமுகத்தை சென்றடைந்தன. அங்கிருந்து 40 டன் திரவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு மும்பை திரும்பும். இதுபோல், தாய்லாந்துக்கு ஐ.என்.எஸ். ஜலஷ்வா போர்க்கப்பல் சென்றுள்ளது. சிங்கப்பூருக்கு ஐ.என்.எஸ். ஐராவத் போர்க்கப்பல் புறப்பட்டுள்ளது.

Contact Us