கொரோனா உலகையே புரட்டி போட்டிருக்கு’… ‘உங்களுக்கு ஒரே ஷோல 185 கோடி சம்பளமா’?… ‘அப்படி என்ன ஷோ அது?… விசாரணையை தீவிரப்படுத்திய சீனா!

ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் ரூ.185 கோடி ஈட்டிய சீன நடிகை மீது விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Zheng Shuan receives 185 crore for TV show in China, investigation

கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் சினிமா தொழில் அதிகளவிலான இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் பெரிய நட்சத்திரங்கள் பலரும் OTTயின் பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பினார்கள். பல நட்சத்திரங்களின் படங்கள் கூட OTT யில் தான் வெளியானது.

Zheng Shuan receives 185 crore for TV show in China, investigation

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த உச்ச நடிகை ஜெங் ஷுவாங் ஒரே ஒரு டிவி ஷோவில் நடித்ததன் மூலம் 185 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார். ஒரு ஆண்டு முழுவதும் பிஸியாக நடித்தால் தான் இந்த தொகையை ஹாலிவுட் சினிமாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகர்கள் ஈட்ட முடியும். அதற்கு நிகரான வருமானத்தை வெறும் 77 நாட்களில் ஒரு டிவி ஷோவில் நடித்து ஈட்டியுள்ளார் ஜெங் ஷுவாங்.

Zheng Shuan receives 185 crore for TV show in China, investigation

இது சீனாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜெங் ஷுவாங் நடித்த அந்த டிவி ஷோவில் அப்படி என்ன இருக்கிறது, எதற்காக அவருக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என பல கேள்விகள் எழுந்தன. இந்த சூழ்நிலையில் அதிக வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக அவர் மீது விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குத் தான் ஒத்துழைப்பதாகவும் Weibo போஸ்டில் பதிவு செய்துள்ளார் ஜெங் ஷுவாங்.

Contact Us