இப்ப எதுக்கு இந்த OVER SCENE?.. அடடடா இவரோட அலப்பறை தாங்க முடியல’!.. சர்ச்சையில் சிக்கிய க்ருணால் பாண்டியா!.. வைரல் வீடியோ!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் க்ருணால் பாண்டியா நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ipl mumbai indians krunal pandya anukul roy controversy

மும்பை அணியில் ஆடி வரும் க்ருணால் பாண்டியா கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். சக வீரர்களிடம் இவர் திமிராக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் க்ருணால் பாண்டியா பேட்டிங் செய்த போது ஸ்டிராட்டஜிக் டைம் அவுட்டில் சக மும்பை வீரர் அங்குள் ராய் இவருக்கு மாய்ஸ்டரைசர் கொடுத்தார். கையை துடைத்துக் கொள்வதற்காக க்ருணால் பாண்டியாவிற்கு அங்குள் ராய் மாய்ஸ்டரைசரை கொடுத்தார்.

இதை பயன்படுத்திய க்ருணால் பாண்டியா, அதை அப்படியே தூக்கி அங்குள் ராயிடம் தூக்கி வீசினார். அவர் முகத்தை கூட பார்க்காமல், கொஞ்சம் கூட அவரை மதிக்காமல் அப்படியே அந்த மாய்ஸ்டரைசரை க்ருணால் பாண்டியா தூக்கி வீசினார்.

அங்குள் ராய் கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக ஆடியது இல்லை. இவர் பெரிய வீரர் கிடையாது. இதனால் அவரை மதிக்காமல் வேண்டும் என்றே க்ருணால் பாண்டியா இப்படி மோசமாக நடந்து கொண்டதாக, இந்த சம்பவம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது.

க்ருணால் இப்படி நடந்து கொண்டது வீடியோவாக வெளியாகி உள்ளது. சக வீரரை தரக்குறைவாக இவர் நடத்தியதாக பலர் புகார் வைத்து வருகிறார்கள். இது போன்ற திமிரான வீரர்களுக்கு இனியும் வாய்ப்பு கொடுக்க கூடாது என்று நெட்டிசன்கள் பலர் கொந்தளித்து வருகிறார்கள்.

 

Contact Us