மாறிய சடலங்களால் வைத்தியசாலையில் பதற்றம்: என்ன தான் நடக்கிறது ?

இரண்டு பெண்களின் சடலங்கள் மாறியதால் நிகவெரடிய ஆதார வைத்தியசாலையில் சற்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக அதிர்வு இணையம் அறிகிறது. மஹவ பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரினதும் மற்றும் நிகவெரடிய பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரினதும் சடலங்களே இவ்வாறு மாறியுள்ளன.

அதன்படி, நேற்றையதினம் (30) 67 வயதுடைய பெண்ணின் உடல் மஹவ பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பூதவுடலை மஹவ பிரதேசத்தில் அமைந்துள்ள மின் மயானத்திற்கு கொண்டு வந்து இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாக அறியப்படுகிறது.

இந்நிலையில், நிகவெரடிய பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரின் சடலத்தை பெற்றுக் கொள்ள வைத்தியசாலைக்கு வந்த போது சடலம் மாறியுள்ளதை அறிந்த பின்னர் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

Contact Us