இந்திய கொரோனா வைரஸ் மனித நோய் எதிர்ப்பு தன்மையை ஏமாற்றி தப்பி பிழைக்கும் வைரஸ் ?

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையில் இருந்து தன்னை தப்பி பிழைக்க வைக்கும் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளதா ? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளதாக டெல்லி மருத்துவமனை வைத்தியர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள். டெல்லியில் உள்ள மருத்துவர்கள், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்தும் பல ஆராட்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். காரணம் என்னவென்றால்…

மனித உடலில் எந்த வைரஸ் புகுந்தாலும், எமது உடல் உடனே அடையாளம் கண்டு விடும். ஆனால் மிகவும் அரியவகையான சில வைரஸ் மட்டுமே தம்மை உருமாற்றி மனித செல்கள் போல நாடகமாடி, எமது வெள்ளை அணுக்களை ஏமாற்றி விடுகிறது. இதனால் அவை இரகசியமாக பல்கிப் பெருகி, இறுதியில் மனிதரை கொல்கிறது. அது போன்ற ஒரு வைரசாக இது இருக்க கூடும் என்ற கோணத்தில் இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். ஏன் எனில் பலருக்கு கொடுக்கப்படும் எந்த மருந்தும் வேலை செய்யவில்லை.

அவர்கள் உடல் எந்த மருந்தை கொடுத்தாலும் கொரோனா மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கிறது. அதன்படி பலருக்கு காச்சல் இல்லை. ஆனால் கொரோனா தொற்று கடுமையாக உள்ளது. எனவே எமது உடல் வைரஸ் இருப்பதை உணரவில்லை என்பது தான் அதன் பொருள். இதனால் இதனை உறுதி செய்ய முடியாமல் திண்டாடி வருகிறார்கள் மருத்துவர்கள்.

Contact Us