இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக வந்து இலங்கையில் ஒளிந்திருந்த குடும்பம்!

இந்தியாவில் மோசமடைந்துள்ள கொரோனா தொற்றை அடுத்து அதிலிருந்து தம்மை பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதமாக வருகை தந்து ஒளிந்திருந்த பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீன்பிடி படகில் கடல் மார்க்கமாக புத்தளம் பகுதிக்கு வருகைதந்து,வீடான்றில் ஒளிந்திருந்த நிலையிலேயே அவர்களை அதே வீட்டில் தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணுடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததாக கூறப்படும் மற்றுமொரு பெண், தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் சென்னை குப்பம் பகுதியில் இருந்து குறித்த பெண் மீன்பிடிப் படகு மூலம் நேற்று (30) அதிகாலை வந்து புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்துள்ளார். 14 மற்றும் 4 வயதுடைய அவருடைய குழந்தைகளுடன் அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவின் அதிகாரிகள் புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் அவர் பதுங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

தாம் வாழ்ந்த பகுதிக்கு அருகில் கொவிட் தொற்று அதிகரித்துள்ளமையினால், தாம் இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளின் போது, குறித்த பெண் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பெண் மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கிய மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 5 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Contact Us