தலையில் துண்டை போட்ட எடப்பட்டி: சசி கலாவை களம் இறக்கி இருந்தால் கூட சமாளித்து இருக்கலாம் !

அசைக்க முடியாத சக்தியாக தி.மு.க தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது என்றால் அது மிகையாகாது என்று தான் கூறவேண்டும். ஆழும் அதிமுக கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வியை தழுவியுள்ளது. சுமார் 153 இடங்களில் தி.மு.க கூட்டணி பெரும் வெற்றியை பெற்று வருகிறது. கடைசி கட்ட வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இதில் பெரிதாக மாற்றம் எதுவும் நிகழப் போவது இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 153 தொகுதிகளில் தி.மு.க முன் நிலை வகித்து வருகிறது. பல அதிமுக அமைச்சர்கள் தற்போது எம்.எல்.ஏ பதவிகளை இழந்து சட்ட சபைக்கே செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். சசி கலா அம்மையாரை…

களம் இறக்கி இருந்தால் கூட மக்கள், பலர் அதிமுக பக்க திரும்பி இருப்பார்கள். ஆனால் சசி கலாவையும் ஓரம் கட்டி, மோடி சொல்வதே வேத வாக்கு என்று செயல்பட்ட அதிமுகாவிற்கு தமிழக மக்கள் நல்லதொரு பாடத்தை புகட்டி உள்ளார்கள் என்று தான் கூறவேண்டும். எடப்பாடி ஒரு பாடாக தனது தொகுதியில் வென்றுவிட்டார். ஆனால் அவரது கட்சியில் உள்ள 40க்கு மேற்பட்ட எம்.ல்.ஏக்கள் பதவிகளை இழந்துள்ளார்கள்.

Contact Us