தேர்தல்’ தோல்விக்கு பின்னர்.. ‘கமல்ஹாசன்’ சொன்ன விஷயம்.. வைரலாகும் ‘ட்விட்டர்’ பதிவு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், பெருன்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.

kamalhaasan tweets after his loss in tamilnadu elections

இந்நிலையில், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், இந்த சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியிருந்தது. இதில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டிருந்தார். இதே தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில், பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனும், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் போட்டியிட்டிருந்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே கமல்ஹாசன் அதிகமாக முன்னிலை வகித்துக் கொண்டே இருந்தார். ஆனால், இறுதிச் சுற்றில் வானதி ஸ்ரீனிவாசன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட நூலிழையில், இந்த வெற்றி வாய்ப்பை கமல்ஹாசன் தவற விட்ட நிலையில், மக்கள் நீதி மைய்ய தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, தனது தோல்விக்கு பின்னர், ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், ‘பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்’ என ஸ்டாலினின் வெற்றிக்கு, தனது வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Contact Us