ச்சே, ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்?.. அவர இப்படி பாக்க வெச்சுட்டீங்களே..” இணையத்தை கலங்கடித்த ‘புகைப்படம்’.. புலம்பித் தள்ளிய ‘ரசிகர்கள்’!!

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின.

warner not selected for playing XI against rajasthan fans reacts

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இன்றைய போட்டிக்கு முன்னதாக, ஹைதராபாத் அணி நிர்வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், ஹைதராபாத் அணியின் தற்போதைய கேப்டன் டேவிட் வார்னரை நீக்கி, அவருக்கு பதிலாக, கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தான் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்த சீசனில், இன்றைய போட்டியுடன் சேர்த்து, இதுவரை 7 போட்டிகளை ஆடியுள்ள ஹைதராபாத் அணி, ஒன்றில் மட்டும் வெற்றி கண்டுள்ளது. ஹைதராபாத் அணியில் குறிப்பாக, மிடில் ஆர்டர் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. இதன் காரணமாக தான், தொடர்ந்து அந்த அணி சொதப்பி வருகிறது.

அணியின் மோசமான செயல்பாடு காரணமாக தான், வார்னரை கேப்டன் பதவியில் இருந்து, ஹைதராபாத் அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் அதிகம் கோபமடைந்தனர். கடந்த பல சீசன்களாக, ஹைதராபாத் அணி சிறப்பாக செயல்படி, ஒருமுறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றக் கூட காரணமாக இருந்த ஒருவரை, ஒரு சீசனின் முடிவை வைத்தே பாதியில் இப்படி நீக்குவதா என வார்னருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

அது மட்டுமில்லாமல், கேப்டன் பதவியில் இருந்து வார்னரை நீக்கியதுமே, இன்றைய போட்டியில் அவரை களமிறக்கவில்லை. இந்த போட்டிக்கு மத்தியில், அணி வீரர்களுக்காக  தண்ணீர் பாட்டில்களை வார்னர் கொண்டு வந்ததைக் கண்டதுமே, ரசிகர்கள் இன்னும் அதிகமாக வருத்தமடைந்தனர்.

ஒரு காலத்தில், அணியின் சிறந்த வீரராக வலம் வந்தவரை, இப்படியா பார்ப்பது என்பது போன்ற கருத்துக்களை ரசிகர்கள் வேதனையில் பகிர்ந்து வருகின்றனர்.

 

Contact Us