உடைஞ்சு போயிருக்கும் திரைத்துறைக்கு ஆக்சிஜன் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்’!.. உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற நடிகர்!

சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Actor Vishal wishes DMK leader MK Stalin and Udhayanidhi

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (02.05.2021) காலை 8 மணி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 156 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய 118 தொகுதிகளை விட அதிக இடங்களில் திமுக முன்னிலை வகிப்பதால், அக்கட்சி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Actor Vishal wishes DMK leader MK Stalin and Udhayanidhi

அதேபோல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 66,302 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

Actor Vishal wishes DMK leader MK Stalin and Udhayanidhi

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Vishal wishes DMK leader MK Stalin and Udhayanidhi

அதில் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நடிகருமான விஷால் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த அற்புதமான வெற்றிக்காக திமுகவுக்கு வாழ்த்துகள். அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறேன்.

அடுத்த சில ஆண்டுகள் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைக்க உள்ளது. அதேபோல் உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Contact Us