59 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என கூறும் கோவை சரளா

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வருபவர் கோவை சரளா. 15 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது 59 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

இதுவரை 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்தநிலையில் தான் திருமணம் செய்யாததற்கு காரணம் என்ன என்பதை நடிகை கோவை சரளா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், 4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் பிறந்தவர் கோவை சரளா. அவர்களுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவர்களே பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக அர்ப்பணித்து விட்டதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என அவர் நெகிழ்ச்சி உடன் கூறியுள்ளார்.

Contact Us