ஒரே கூட்டணியில் போட்டியிட்ட தந்தை-மகன் வெற்றி… நடந்த சுவாரஸ்யம்..!

புதுச்சேரி சட்டம்ன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடத் தந்தை, மகனுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதில் காமராஜர் நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜான்குமார் மீண்டும் அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரின் மகன் விவியன் ரிச்சர்ட்ஸ் நெல்லித்தோப்பு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றது. இதில் தந்தை-மகனான ஜான்குமார், விவியன் ரிச்சர்ட் இருவரும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் குறைந்த வயதுடையவர் ரிச்சர்ட் ஆவார். இவரது வயது 28.

விவியன் ரிச்சர்ட்ஸ்

நெல்லித்தோப்பு தொகுதியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரின் சொந்தத் தொகுதியான நெல்லித்தோப்பை அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்காக அவர் விட்டுக் கொடுத்திருந்தார். அதன் பிறகு காமராஜர் நகரில் போட்டியிட்டு ஜான்குமார் எம்எல்ஏ ஆனார்.

அதைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்த ஜான்குமாருக்கு மீண்டும் காமராஜர் நகரில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல் தனது மகனைச் சொந்தத் தொகுதியில் களம் இறக்கியுள்ளார். அவர் முதல் முறையாக பாஜகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us