24 மணி நேரத்தில் 215 துரத்தி துரத்தி கைது செய்த ஸ்ரீலங்கா பொலிஸார்!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய 4857 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Contact Us