29 லட்சம் வாக்குகள்.. அடித்து துவைத்த நாம் தமிழர் கட்சி- தமிழகத்தில் 3ம் இடம் !

தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. 125 இடங்களில் வென்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற்ற வாக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வாக்கு சதவிகிதம் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் பின்வருமாறு
திமுக – 37.15%
அதிமுக – 33.28%
காங்கிரஸ் – 4.28%
மக்கள் நீதி மய்யம் 2.4%
நாம் தமிழர் கட்சி 6.6%
அமமுக 2.4%
பாட்டாளி மக்கள் கட்சி – 3.81%
இந்திய கம்யூனிஸ்ட் – 1.09%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85%
தேமுதிக – 0.43%
பாஜக – 2.63%
விசிக- 1.3%
முஸ்லிம் லீக்- 0.48%

வாக்கு எண்ணிக்கை தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை
திமுக – 15685421
அதிமுக – 14385410
நாம் தமிழர் – 2958458

இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி 234 தொகுதிகளில் சிறப்பாக செயலாற்றி உள்ளது. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக மிக அதிகமாக 2958458 வாக்குகளை பெற்று நாம் தமிழர் அசத்தி உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் இந்த முறையும் கூட்டணியே இல்லாமல் போட்டியிட்டு அதிக அளவில் வாக்குகளை வென்றுள்ளது.

Contact Us