லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி; நடந்த கொடுமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வடக்கே அமைந்த ஷகார்தாரா மாவட்டத்தில் குவாலா இ முராட் பேக் பகுதியில் எரிபொருள் ஏற்றிய லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து தீயானது மற்ற லாரிகளுக்கும் அடுத்தடுத்து பரவியது.

இதில் எரிபொருள் லாரிகள், டிரக்குகள், கார்கள் என பல வாகனங்கள் எரிந்தன. மற்றும் வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவையும் எரிந்தன. இந்த தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

Contact Us