சித்தார்த்திடம் இந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஓபன் ஆக சொன்ன தளபதி விஜய்

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மனிதராக பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தைரியமாக கூறிவருகிறார் நடிகர் சித்தார்த். அதுவும் பிஜேபிக்கு எதிராக இவர் கொடுக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் பதிவுகளும் சாட்டையடி போல இருக்கிறது.

இதன் காரணமாகவே அவருக்கு அரசியல் ரீதியான மிரட்டல்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்த முடியாது என கங்கனம் கட்டிக் கொண்டிருப்பார் போல. சித்தார்த் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சித்தார்த் பலருக்கும் விருப்பமான நடிகராக உள்ளார். ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பல நடிகர் நடிகைகளுக்கும் பேவரிட் ஹீரோ இவர்தான். மாதவன் எப்படியோ அப்படித்தான் சித்தார்த்தும்.

அந்தவகையில் தளபதி விஜய்யையும் சித்தார்த் கவர தவறவில்லை. சித்தார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், சித்தார்த்தின் அனைத்து படங்களையும் பார்த்து விடுவேன் எனவும் சித்தார்த்தின் கியூட்னஸ் மிகமிகப் பிடிக்கும் எனவும் தளபதி விஜய் ஒரு முறை ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் கூட மத்திய அரசை எதிர்த்துப் பேசியதற்காக சித்தார்த்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் சித்தார்த்துடன் துணை நிற்பதாக சமூக வலைதளங்களில் ட்ரண்ட் செய்தனர்.

Contact Us