ஈழத் தமிழர்களுக்கு உதவிய மருத்துவர் எழிலனுக்கு தமிழக அமைச்சர் பதவி: ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சி !

தி.மு.கவில் பல அரசியல் தலைவர்கள், பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் எதுவும் பெரிதாக வெளியாவது இல்லை. அது போலத் தான் மருத்துவர் எழிலன். 2009ல் ஈழத் தமிழர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மருத்துவர் எழிலன் செய்த பல உதவிகள், பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதனை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அவர் செய்த அந்த உதவிகளை ஈழத் தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.  இன் நிலையில் தி.மு.க தமிழ் நாடு தேர்தலில் பெரும் வெற்றி ஈட்டியுள்ளது. சுமார் 30 அமைச்சர்கள் பொறுப்பேற்க்கவுள்ள நிலையில். 5 புது புது முகங்கள் மட்டுமல்ல இளைஞர்களாகிய இவர்களுக்கு அமைச்சு பதவி கொடுப்பது தொடர்பான லிஸ்ட் ஒன்று தயாராகியுள்ளது… இதனை..

தி.மு.காவுக்கு நெருக்கமான சிலர் வெளியிட்டுள்ள போதும், இதுவே இறுதியானது என்று கூறிவிட முடியாது. அந்த வகையில் முதல்முறையாக சில இளைஞர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் டாக்டர் எழிலனுக்கு சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலம், அமைச்சுப் பதவி வழங்ப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை உதய நிதி ஸ்டாலினுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அமைச்சும் வழங்கப்பட உள்ளது. இம் முறை தி.மு.க ஆட்சியில் பல இளைஞர்கள் அமைச்சர் ஆகிறார்கள். அத்தோடு 3 பெண்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

தக்க நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கு பெரிதும் உதவிய மருத்துவர் எழிலனுக்கு வாழ்த்துக்கள். அவர் சேவை மேன்மேலும் உயரவேண்டும்.

அதிர்வுக்காக
கண்ணன்

Contact Us