இருக்கா?.. இல்லையா?.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க’!.. சிஎஸ்கேவின் கொரோனா ரிப்போர்ட் குறித்து… அடுத்தடுத்து திருப்பங்கள்!.. ரசிகர்கள் குழப்பம்!!

சிஎஸ்கே அணிக்குள் கொரோனா புகுந்ததா, இல்லையா என்ற மிகப்பெரிய குழப்பம் உருவாகியுள்ளது.

ipl csk corona covid cases false positive says report

சிஎஸ்கே அணியின் வீரர்கள் அல்லாத 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், பௌலிங் கோச் பாலாஜி மற்றும் பேருந்தை சுத்தப்படுத்தும் ஊழியர் ஆகியோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ரேப்பிட் ஆன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதவிருந்தன.

.

சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், பௌலிங் கோச் பாலாஜி மற்றும் அந்த அணியின் பேருந்து க்ளீனர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த டெஸ்ட்கள் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட்கள் என்று கூறப்பட்டுள்ளன. இவை கடந்த 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று எடுக்கப்பட்ட ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டில் இவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து, ஒரு முடிவிக்கு வரமுடியாமல் குழப்பத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உள்ளது. தொடர்ந்து பல்வேறு டெஸ்ட்களை எடுத்து ஒரு முடிவுக்கு வரவும் திட்டமிட்டுள்ளன.

இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சரியான பணியை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனினும், சிஎஸ்கே வீரர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைகளில் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதையடுத்து அணி நிர்வாகத்தை ஆசுவாசப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை ஒரே இடத்தில் நடத்தி முடிக்க வேண்டும் அல்லது கடந்த ஆண்டை போல யூஏஇயில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனிடையே கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அந்த இடங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Contact Us