அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே கோட்டாபயவிற்கு எதிராக மாறி விட்டனர்; தற்போது என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?

திலும் அமுனுகமவை சமுக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக நியமித்ததன் மூலம் அவரது ஹிட்லர்வாதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக அமைந்துள்ளதென ஆளும் கட்சிக்கு நெருக்கமான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஹிட்லர் போன்று ஆட்சி புரிய வேண்டும் என பகிரங்கமாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய திலும் அமுனுகமவிற்கு புதிய இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதற்கே தேரர் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபயவை ஜனாதிபதியாக நியமித்தது ஹிட்லராகுவதற்கு அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Contact Us