அடுத்த எலக்சன்ல வின் பண்ணனும்னு நினைச்சா தொகுதி பக்கம் தலைய காட்டுங்க ப்ரோ’!.. கிண்டலடித்த நெட்டிசனுக்கு ‘பக்குவமாக’ பதில் சொன்ன விஜய் வசந்த்..!

டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் கிண்டலாக கேட்ட கேள்விக்கு கன்னியாகுமரி மக்களை உறுப்பினர் விஜய் வசந்த் பளீரென பதிலளித்துள்ளார்.

Vijay Vasanth humble reply to netizens question in Twitter

கன்னியாகுமரி மக்களை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் வசந்தக்குமார், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அதனால் தமிழக சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

Vijay Vasanth humble reply to netizens question in Twitter

இதனை அடுத்து நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை 1,34,344 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் தோற்கடித்தார். விஜய் வசந்த் மொத்தமாக 5,67,250 வாக்குகள் பெற்று சாதனைப் படைத்தார்.

Vijay Vasanth humble reply to netizens question in Twitter

இந்நிலையில் டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர், ‘அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ’ என கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த விஜய் வசந்த், ‘அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன். இது அடுத்த எலக்சன்ல வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த எலக்சன்ல நீங்க என் மேல் வைத்த நம்பிக்கைக்கு’ என பளீச்சென பதிலளித்தார். அதேபோல் கன்னியாகுமரி தொகுதியில் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் விஜய் வசந்த் தெரிவித்தார்.

Contact Us