முட்டாளா நீ.. ரசிகரின் தரங்கெட்ட பதிவால் கடுப்பாகி திட்டிய பிரியா பவானி சங்கர்

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளுடன் ரசிகர்கள் அத்துமீறி பேசி வருவது வாடிக்கையாகி விட்டது. அதுவும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களை தரம் தாழ்த்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இன்று பல பிரபலங்கள் டிவிக்கள் மற்றும் யூடியூப் போன்றவற்றில் பணியாற்றியதிலிருந்து சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் பிரியா பவானி சங்கர்(priya bhavani shankar).

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அந்த சீரியல் இவரது சினிமா வாழ்க்கைக்கு பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

அதன்காரணமாக தற்போது தவிர்க்க முடியாத தமிழ் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றதை ஆதரித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் அவரிடம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஜால்ரா போடுகிறார் என்பது போல அவரை குத்தி காட்டி பேச, டென்ஷனான ப்ரியா பவானி சங்கர், நடிகைக்கு முன்னாலே நான் ஒரு ஜர்னலிஸ்ட் என பதிலடி கொடுத்துள்ளார்.  மேலும் பிரியா பவானி சங்கரின் பழைய பதிவுகளை தேடி எடுத்து அவற்றை வைத்து அவரிடம் தொடர்ந்து அந்த நபர் கேள்வி கேட்க, டென்ஷனாகி முட்டாள்தனமான பதிவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற கருத்தை பதிவிட்டு அந்த ரசிகரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Contact Us