ரிசாத் பதியுதீனை காணவில்லை; ஏன் அழைத்து வரப்படவில்லை? வெளியானது காரணம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு ஏன் அழைத்து வரப்படவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அனுமதி அளித்திருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதின் சிஐடி பிரிவினரால் நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் கலந்து கொள்ள அழைத்து வரப்படவில்லை.

எனினும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக சிஐடி பிரிவினர் ரிசாத் பதியுதீனை நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொள்ள அழைத்துவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ரிசாத் பதியுதீனுடன் நெருங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ரிசாத் பதியுதீனும் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் அதன் முடிவு வௌியாகவில்லை.

இதன்காரணமாகவே அவர் நாடாளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Contact Us