’78 வயது முதியவரோடு கல்யாணம்’… ‘ஆசையாய் ஷாப்பிங் போன இடத்தில் கேட்ட கேள்வி’… வெறுத்து நொந்துபோன இளம்பெண்!

78 முதியவர் ஒருவரை இளம்பெண் திருமணம் செய்த நிலையில் சமுதாயத்தில் அவர் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

28-YEAR-OLD woman who is dating a man 48 years her senior

அமெரிக்காவில் Guy என்பவருக்கு தற்போது 78 வயதாகிறது. 42 ஆண்டுகள் இவருடன் வாழ்ந்த மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். பின்னர் மன நிம்மதிக்காக யோகா வகுப்பில் அவர் சேர்ந்த நிலையில் அங்கு Kelsey என்ற 28 வயது இளம்பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது.

28-YEAR-OLD woman who is dating a man 48 years her senior

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாகப் பழகிய நிலையில் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவருக்கும் 48 வயது வித்தியாசம் உள்ளது என்பதைத் தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு வந்தனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், Kelsey தங்களது காதல் குறித்துக் கூறுகையில், ”பார்த்த உடனேயே எங்களுக்குள் காதல் வரவில்லை. பேசி பழகிய பின்னரே மனதால் ஒன்றானோம்.

28-YEAR-OLD woman who is dating a man 48 years her senior

முதலில் எங்கள் காதல் குறித்து நான் யாரிடமும் சொல்லவில்லை. திருமணம் என்ற நிலைக்கு வந்த பின்னர் தான் தெரிவித்தோம். அவரின் வயது அதிகம் என்பதால் அவரை இழந்துவிடுவேன் எனவும் பயம் உள்ளது. ஆனால் இறப்பு என்பது எப்படியும் வரும், அதுவரை அதை நினைத்துக் கவலைப்படக் கூடாது என்பதை உணர்ந்துள்ளேன். அதுவரை ஒருவர் மீது ஒருவர் அதிக காதலைக் கொண்டு வாழ்வோம்” எனக் கூறியுள்ளார்.

28-YEAR-OLD woman who is dating a man 48 years her senior

இதற்கிடையே ஆசை ஆசையாய் ஷாப்பிங் சென்ற இடத்தில் ஒருவர் கேட்ட கேள்வி தான் அவரை வெகுவாக பாதித்துள்ளது. அதாவது Guyயுன் Kelseyயை சேர்த்து வைத்துப் பார்த்த ஒரு நபர், நீங்கள் Guyயை பராமரித்துக் கவனித்துக் கொள்ளும் பெண்ணா எனக் கேட்டுள்ளார்கள். இதைக் கேட்ட Kelsey மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளார். இதுபோல பல கேள்விகளைத் தான் எதிர்கொள்வதாக Kelsey வேதனையுடன் கூறியுள்ளார்.

Contact Us