கொந்தளித்த ரசிகர்கள்’…’DADDY வீட்டுக்கு வந்துருங்க ப்ளீஸ்’… ‘நட்சத்திர வீரரின் மகள் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்’… தவிக்கும் செல்ல மகள் !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

David Warner Posts Heart Touching Drawing by His Daughter Ivy

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில் தினம் தினம் பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐபிஎல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குப் பல ஆண்டுகள் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

David Warner Posts Heart Touching Drawing by His Daughter Ivy

அதோடு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணியிலேயே இல்லை, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கும் ஒரு படி மேல் டேவிட் வார்னர் பந்து பொறுக்கிப் போட்ட காட்சியும் டிரிங்க்ஸ் சுமந்த காட்சியும் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியது.

David Warner Posts Heart Touching Drawing by His Daughter Ivy

ஒரு அணிக்காக உயிரைக் கொடுத்து விளையாடி, ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர் டேவிட் வார்னர், அவருக்கே இந்த கதியா என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையில் இந்தியாவிலிருந்து யாராக இருந்தாலும் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையக் கூடாது, மீறினால் சிறைத்தண்டனை கடும் அபராதம் என்று பிரதமர் தடை உத்தரவு போட்டார்.

David Warner Posts Heart Touching Drawing by His Daughter Ivy

இந்த தடையை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மே 15ம் திகதிக்கு பிறகே சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியும். இந்நிலையில் டேவிட் வார்னர் மகள் இவி வரைந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து விடுங்கள், நாங்கள் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். ஆனாலும் கொரோனா நிலையால் மகளை தற்போது காணமுடியாத சூழலில் சிக்கி வார்னர் தவித்து வருகிறார்.

Contact Us