டிஸ்டன்ஸ் முக்கியம்…! ‘பக்கத்துல வராம மாலைய மாத்திக்கணும்…’ தம்பதியினரின் ‘வேற லெவல்’ ஐடியா…! – வைரலாகும் வீடியோ…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொது விழாக்கள், திருமணங்கள் மற்றும் இறப்பு வீடுகளுக்கு செல்வோருக்கு என பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

bride groom exchanged wedding garlands with bamboo sticks

சென்ற வருடம் கொரோனா வைரஸ் ஊரடங்கின் போது பல திருமணங்கள் விசித்திரமாக நடந்து முடிந்தது. அதன்பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாவட்டத்தின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் தீபன்ஷிகப்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மணமகளும், மணமகனும் திருமண மாலையை மூங்கில் குச்சி மூலம் மாற்றி கொள்வதும், முகக்கவசம் அணிந்து இடைவெளிவிட்டு நிற்பதுமாக இருந்தனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றுள்ளது..

 

Contact Us