இலங்கை சட்டம் இதுதான்… திஸ்ஸ அத்தநாயக்க என்ன செய்கிறாரென்று பாருங்கள்!

ஹொரண பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி நடத்தப்பட்ட ஒரு திருமண வைபவத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பியான திஸ்ஸ அத்தநாயக்க கலந்து கொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவளைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.

இது தொடர்பில் அவரிடம் விசாரித்த போது,

ஹொரணையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தான் கலந்து கொண்டதாகவும், குழு புகைப்படம் மற்றும் உணவு உண்ணும் நேரத்தில் மட்டுமே தாம் அணிந்திருந்த முகக்கவசத்தை அகற்றியதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற புகைப்படங்களை பயன்படுத்தி தேவையற்ற விளம்பரம் பெற முயற்சிக்கும் சிறு குழந்தை போன்ற நடவடிக்கைகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியாக எப்போதும் நாட்டின் சட்டங்களின்படி செயல்படுவதாகவும் கூறினார்.

இதேவேளை குறித்த திருமணம் 29 ஆம் திகதி நடைபெற்றது என்றும். அதை இப்போது பெரிது படுத்த காரணம் என்ன? என்றும் குறிப்பிட்டார்.

Contact Us