யாழ்ப்பாணம் உணவகத்தில் ஒருவர் திடீர் மரணமடைந்ததினால் பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் நபரே உயிரிழந்துள்ளார்.

மந்திகைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அல்வாய் வடக்கை சேர்ந்த இராசையா தீபனகுமார் வயது 41 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு கறி சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.

அதனையடுத்து அங்கிருந்த ஏனைய பணியாளர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

Contact Us