ரொம்ப ‘URGENT’அ உதவி தேவைப்படுது..” ட்விட்டரில் பதிவிட்ட ‘ரெய்னா’.. மறுகணமே வந்து நின்ற ‘சோனு சூத்’.. நெகிழ்ச்சி ‘சம்பவம்’!!

கொரோனா வைரசின் இரண்டாம் அலை, இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன.

suresh raina asks help in twitter for oxygen sonu sood responds

இதன் காரணமாக, பலர் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வந்த வண்ணம் உள்ளனர். மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில், ஒட்டு மொத்த இந்தியாவும் தவித்து வரும் நிலையில், இந்த நெருக்கடியை சமாளிக்கவும், பலர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா (Suresh Raina), ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார்.

இதில், உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியிலுள்ள தனது அத்தை ஒருவர், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு, கடுமையான நுரையீரல் தொற்றின் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மிகவும் அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும், தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ரெய்னா ட்வீட் செய்த கொஞ்ச நேரத்தில், நடிகர் சோனு சூத் (Sonu Sood), ‘விவரங்களை எனக்கு அனுப்புங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன்’ என குறிப்பிட்டார்.

 

இதற்கு நன்றி தெரிவித்த ரெய்னா, இதற்கான விவரங்களையும் சோனு சூத்திடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் பிறகு, சோனு சூத், தனது ட்விட்டரில், ’10 நிமிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வந்தடையும்’ என ரெய்னாவிற்கு பதில் தெரிவித்தார்.

தொடர்ந்து, ரெய்னாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதரவை வழங்கிய அனைவருக்கும் என்னால் போதுமான நன்றியை சொல்ல முடியாது. அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது முதலே, இந்தியாவிலுள்ள புலம்பெயர் தொழிலார்கள் மற்றும் ஏழை மக்களுக்கு, தன்னாலான பல உதவிகளை சோனு சூத் செய்திருந்தார்.

அதே போல, தற்போதைய சூழ்நிலையிலும், தன்னுடைய தொண்டு நிறுவனம் மூலம் ஆக்சிஜன் தேவைகள் உள்ளிட்ட பல உதவிகளை, சோனு சூத் செய்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Contact Us