’பள்ளி பருவம் முதலே காதல்’… ’கையெழுத்து போட ரெடியா இருந்த இளம் தம்பதி’… ‘திபுதிபுவென வந்த கும்பல்’… தகர்ந்த மொத்த கனவு!

சினிமா பாணியில் பெண்ணை இழுத்துச் சென்ற பெண் வீட்டாரிடம் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Parents attacked newly married couple and dragged the girl away

மாதம் பட்டியை அடுத்த குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்  பகவதி குமார் மற்றும் ஹரிபிரியா. பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் காதலித்து வந்து உள்ளனர். இருவரும் வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் கொடுத்து அதற்கான வேலைகள் நடந்து உள்ளன.

அனைத்து வேலையும் முடிந்து இவர்களைப் புகைப்படம் எடுக்கப் பத்திர பதிவாளர் மோகன் குமார் அழைத்து உள்ளார். அப்பொழுது திடீரென அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண் வீட்டார், பெண்ணை மட்டும் இழுத்து வெளியே சென்று உள்ளனர். பெண்ணின் அண்ணன் கார்த்திகேயன் கையிலிருந்த மிளகாய்ப் பொடியைப் பகவதி குமார் மீது வீசி உள்ளார். அதே சமயத்தில் ஹரி பிரியாவின் தந்தை ராமமூர்த்தி பகவதி குமாரைத் தாக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தாங்கள் வந்த வாகனத்தில் பெண்ணை இழுத்துச் சென்றனர்.

Parents attacked newly married couple and dragged the girl away

பத்திரப் பதிவு அலுவலகத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம்  அங்கு இருந்த பத்திர எழுத்தர்கள் மற்றும் பதிய வந்த வாடிக்கையாளர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பகவதி குமாரிடம் புகார் பெறப்பட்டு தொண்டாமுத்தூர் காவல்துறையினர் ஹரிப்பிரியாவை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us