ரொம்ப பெருமையா இருக்கு…’ ‘அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள்…’ – அழகிரி வாழ்த்து…!

தமிழக முதலமைச்சராக நாளைய தினம் பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அவரது அண்ணன் மு.க அழகிரி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள முக ஸ்டாலினை பார்த்து பெருமைக்கொள்கிறேன் என்றும், அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் என அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டிப்பாக நல்லாட்சி வழங்குவார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இன்று (07-05-2021) ஒன்பது மணிக்கு ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் நிலையில் பல கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Contact Us