உடைந்தது கமலின் மக்கள் நீதி மையம்: ஆளுக்கு ஆள் ஒவ்வொரு பக்கமாக செல்ல ஆரம்பித்தார்கள் !

மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள மகேந்திரன், கமல்ஹாசன் தனது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை என்றும் விமர்சித்து விலகிச் சென்றுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது !தமிழக சட்டசபை தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்களான பொன்ராஜ், ஸ்ரீப்ரியா, சிநேகன், சந்தோஷ் பாபு என அனைவரும் தோல்வியடைந்தனர்.

குறிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், இன்று ஒரே நாளில் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகியுள்ளனர். அக்கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு, சிகே. குமரவேல் மவுரியா ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கமலுக்கு அடுத்து கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்தே முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவர் ஏன் விலகினேன் என்பதனை விரிவாக தெரிவித்துள்ளார். கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்குப் பிறகும், தனது தோல்விக்குப் பின்னரும், கமல்ஹாசன் தனது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. மாறிவிடுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. எனக்குத் தெரிந்த கமல்ஹாசன், கொள்கைக்காகவும், எளிய தொண்டர்களுக்குத் தோழனாகவும், அனைத்து நல்ல தலைமைப் பண்புகளையும் கொண்ட நம்மவராக மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்.

கமல் ஹாசன் பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்து வருவதும். பெயர் அளவில் துணை தலைவர் செயலாளர்களை வைத்திருப்பதும் பலரை அதிருப்த்திக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் சொல்லப் போனால் தேர்தலில் தோற்ற பின்னர் கூட, கட்சியில் உள்ள துணைத் தலைவர்கள் சொல்வது எதனையும் கமல் ஹாசன் காது கொடுத்து கேட்ப்பதே இல்லையாம். இதனால் தற்போது அவரது கட்சியே உடைந்து நடு தெருவுக்கு வந்துவிட்டார் என்பது தான் உண்மை நிலை.

Contact Us