மண்டை தட்டிய விமானி: திட்டம் போட்டு 239 பயணிகளோடு விமானத்தை கடலில் குப்புற வீழ்த்திக் கொன்றார் ?

MH370 மலேசிய விமானம் என்றால் அறியாத நபர்கள் இருக்க மாட்டார்கள். இந்த விமானம் இந்துமா கடலில் வீழ்ந்து அதில் பயணித்த 239 பேரும் இறந்து போனார்கள். இன்றுவரை விமானத்தை கண்டு பிடிக்கவும் இல்லை. எவரது உடல்களையும் மீட்க்கவும் முடியவில்லை. ஆனால் புது புது தகவல்கள் மட்டும் வந்து கொண்டே இருக்கிறது. அது என்னவென்றால், அன்றைய தினம் விமானத்தை செலுத்திய பைலட் அசீர் அகமெட் ஷா என்ற நபர், மிக மிக மோசமான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது தான். அதற்காக அவர் தனது குடும்ப வைத்தியரிடம் மருந்தை எடுத்து வந்த நிலையில்…. மிகவும் துல்லியமாக தனது சாவுக்கும் ஏனைய பயணிகள் சாவுக்கும் அவர் திட்டம் தீட்டியுள்ளார் என்று, தற்போது நம்பப் படுகிறது… காரணம் என்னவென்றல்…

விமானம் செல்ல வேண்டிய பாதையில் இருந்து விலகி, மொறோக்கோ நாட்டுக்கு மேல் பறந்தது. கட்டுப்பாட்டு அறையோடு தொடர்புகளை பேணவில்லை. இதனால் மலேசிய கட்டுப்பாட்டு திணைக்களம், மொறோக்கோ நாட்டு ராணுவ ராடரில் விமானம் தெரிகிறதா என்று கேட்டுள்ளார்கள். இதனால் மொறோக்கோ நாட்டு ராணுவம் MH370 விமானத்தை ராடர் மூலம் கண்காணித்துள்ளார்கள். மேலும் அன் நாட்டு ராணுவம் வயர்லெஸ் மூலமாக விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றுள்ளது. ஆனால் எவருமே பேசவில்லை. இன் நிலையில், விமானம் திடீரென கடல் மட்டத்தில் பறக்க ஆரம்பித்த காரணத்தால் ராடர் திரையில் இருந்து மறைந்து போனது.

அதன் பின்னரே விபத்தும் நிகழ்ந்துள்ளது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது, மன நிலை பாதிப்படைந்த விமானியான அசீர் அகமெட் ஷா, தனது சக விமானியை செயல் இழக்கச் செய்து விட்டு. விமானத்தை இந்துமா கடலின் மிக மிக ஆழமான பகுதியில் மூழ்கடித்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையான தற்கொலை தான். ஆனால் அவர் தற்கொலை செய்ய , 239 பயணிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது தான் மிகவும் சோகமான விடையம்.

Contact Us