முழு பிரிட்டனையும் ஒரு நொடியில் அழிக்கவல்ல சைத்தான் 2 ஹப்பர் சோனிக் ஆயுதம் ரஷ்யாவிடம்- பரிசோதனை நடக்கிறது !

முழு இங்கிலாந்தும் எவ்வளவு தேசமோ, அந்த நிலப்பரப்பை நொடிப் பொழுதில் அழிக்கவல்ல, அதி நவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒன்றை ரஷ்யா பரிசோதனை செய்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. INVINCIBLE  என்று கூறப்படும் ராடர் மற்றும் மனித கண்களுக்கு இந்த ஏவுகணை தென்பட மாட்டாது என்றும். அது ஹைப்பர் சோனிக்(மிகை ஒலியில்) பயணிக்க கூடியது என்றும் ரஷ்ய அதிகாரிகள் சற்று முன்னர் தகவல் வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டை ஒத்த ஒரு நிலப்பரப்பை அது துவம்சம் செய்யக் கூடியது என்று அவர்கள் தெரிவித்துள்ள விடையம். மறை முகமாக இங்கிலாந்திற்கு ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கை தான். VIDEO கீழே உள்ளது

இடம் குறிப்பிடப்படாத  ரஷ்யாவின் பனி படந்த காட்டுப் பகுதி ஒன்றில் இருந்து இதனை ஏவி, கடலில் வீழ்த்தி பரிசோதனை செய்து பார்க்க உள்ளது ரஷ்யா. இதனை பல உலக நாடுகள் உண்ணிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க. ரஷ்யாவிடம் இப்படி ஒரு ஆயுதம் உள்ளதாக கடந்த 2 வருடங்களுக்கு முன்னரே செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் அது கட்டுக் கதை என்று அமெரிக்க அதிபர் டொனால் ரம் தெரிவித்து இருந்த நிலையில். இன்று அந்த ஆயுதத்தை ரஷ்யா பரிசோதனை செய்கிறது. இதற்கு சாட்டன் 2(சைத்தான்) என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது: Source Russian Federation : Russia announces three tests of Putin’s ‘invincible’ new hypersonic ‘Satan 2’ super nuke capable of wiping out an area the size of England and Wales :

Contact Us