அன்று பின் வரிசையில் விட்டு அவமானப் படுத்தியவர்களை இன்று முன் வரிசையில் இருத்திய ஸ்டாலின் – குவிவும் பாராட்டுகள் !

அரசியலில் மிகவும் கற்றுத் தேர்ந்த மனிதராக மாறிவிட்டார் மு.க ஸ்டாலின். எந்த ஒரு பழி வாங்கும் உணர்சியும்  அவரிடம் இல்லை. குறிப்பாக சொல்லப் போனால் ஒரு அரசியல் நாகரீக மேதையாக மாறிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.  ஜெயலலிதா பதவி ஏற்ப்பில் இது நடந்தது.  ஆட்சிப் பொறுப்பை ஏற்க்க அ.தி.மு.க  குழுவினர்,  ஆழுனர் மாளிகை சென்றவேளை.  ஸ்டாலினும் விழாவுக்கு சென்றார். ஆனால் அங்கே அவரை ஒதுக்கி ஓராமாக நிற்க்க விட்டார்கள், எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர்.

ஆனால் இன்று முதல் அமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்க்க ஆழுனர் மாளிகை சென்றார். அந்த விழாவில் கலந்து கொள்ள முன் நாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வந்திருந்தார். அவரைக் கண்டதும் ஸ்டாலின் அழைத்து அருகே உட்கார வைத்து பேசியதோடு மட்டுமல்லாமல்.  தான் ஆழுனரோடு இருந்த அதே மேசையில் உட்கார வைத்து மரியாதை செலுத்தி உள்ளார். இதனை அதிமுகவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த அரசியல் நாகரீகத்தை பார்த்த பல அதிமுகவினர் வெட்கிப் போனார்கள்.

தாம் முன்னர் ஸ்டாலினுக்கு செய்த செயலை எண்ணி மனம் வருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க முதல்வர் ஸ்டாலின் செய்த இந்தச் செயலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது. பாராட்டு மழை பொழிகிறது.

 

Contact Us