அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசி…. இந்த வயதை சேர்ந்தவர்கள் போட வேண்டாம்…. பரிந்துரை செய்த நோய் தடுப்பு குழு….!!

பிரிட்டனில் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசிகள் போடப்ப்படும் என அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசிகள் போடப்ப்படும் என அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழு அஸ்ட்ராஜெனேகா ரத்த உறைவு ஏற்படுவதால் அதற்கு பதிலாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

இதனிடையே பிரிட்டன் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசியை வழங்க அறிவித்திருந்தது. மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது.

Contact Us