பிரிட்டன் தமிழர்கள் விடுமுறைக்கு எந்த நாடுகள் செல்ல முடியும் ? என அறிவிப்பு வெளியானது !

பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மே 17ஆம் தேதி வெளிநாடுகளுக்கும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம் செய்யக்கூடாது என பச்சை பட்டியல், மஞ்சள் பட்டியல், சிவப்புப் பட்டியல் என பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியலை போக்குவரத்து செயலாளர் பிரான்ஸ் ஷாப்ஸ் இன்று மாலை 5 மணி அளவில் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் பிரிட்டன் மக்கள் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகள் இல்லாமல் சுற்றுலா சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பச்சை பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சென்று வருபவர்கள் ஒரு கொரோனா பரிசோதனை மட்டும் எடுக்க வேண்டும் என்றும் ஆனால் தனிமைப்படுத்திக் கொள்ள தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மஞ்சள் பட்டியலில் உள்ள நாட்டிலிருந்து வரும் மக்கள் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் இரண்டு பரிசோதனைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்பவர்கள் 1750 பவுண்ட் கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இரண்டு பரிசோதனைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us