மட்டக்களப்பு விபத்தில் உயிரிழந்தவர் RJ மேனகாவின் தங்கை; விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது!

 

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பரமேஸ்வரன் தனுஜன் (31), துரைசிங்கம் வினோகா (31) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் . இந்த விபத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த போதே விபத்து நேர்ந்தது. நேற்று முன்தினம் இரவு (வியாழக்கிழமை) 10.50 மணியளவில் விபத்து நடந்தது.

விபத்து நடந்த நேரத்தில் வினோகா வாகனத்தை செலுத்தியதாக கருதப்படுகிறது. வாகனம் அதிவேகமாக பயணித்து விபத்து நேர்ந்தது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இருவரும் ஆசனப்பட்டியை அணியாதமையே விபத்தில் அவர்கள் உயிரிழக்க காரணமாக அமைந்தது. விபத்தையடுத்து வாகன கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு இருவரும் வெளியே வீசப்பட்டனர்.

பரமேஸ்வரன் தனுஜன் திருமணமானவர். கொழும்பு- மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர். அவர் மனைவி, பிள்ளைகளை கொழும்பில் விட்டு விட்டு, திரும்பி வரும்போதே விபத்திற்குள்ளாகினார்.

வினோகா திருமணமாகி பிரிந்து வாழ்கிறார்.பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்தவர்கள் மதுபோதையில் இருக்கவில்லையென்பது உறுதியாகியுள்ளது. இதனால் தூக்க கலக்கம், அதிவேகம் போன்ற காரணங்களினால் விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது

Contact Us