10 வருடத்திற்கு பொறிஸ் ஜோன்சனே பிரதமர்- பிரிட்டனில் எகிறிய கான்சர்வேட்டிவ் கட்சி !

பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில், ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி பல இடங்களில் வென்றுள்ளது. பல காலமாக தொழில் கட்சியின் இடமாக இருந்து வந்த நகரங்களையும் கான்சர்வேட்டிவ் கட்சி கைப்பற்றி பெரும் வெற்றியடைந்துள்ளது. இன் நிலையில் ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சிக்கு அதிகரித்துள்ள செல்வாக்கு காரணமாக அடுத்த பிரித்தானிய பிரதமர் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனே களம் இறங்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து 10 வருடங்களுக்கு பிரதமர் பதவி வகிக்கப் போகிறார் பொறிஸ் ஜோன்சன் என்று பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த தேர்தலை சந்திக்க பொறிஸ் ஜோன்சன் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Contact Us