வான்வழித் தாக்குதலில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு; பெரும் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 சதவீதம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2016ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடையே பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆயிரத்து 977 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஆயிரத்து 600 பேர் குழந்தைகள் எனவும் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் வரை கொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அமெரிக்கத் தலைமையிலான படைகள் வெளியேறுவதற்கு முன்னதாக, சர்வதேச கூட்டணி படைகளின் வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் இறப்பு 2017 ல் 247 ஆக இருந்து 2019 ல் 757 ஆக மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்தின் (யுனாமா) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆப்கானிஸ்தான் இயக்குனர் கிறிஸ் நியாமண்டி கூறும் போது

துரதிர்ஷ்டவசமாக, இந்த எண்ணிக்கை ஆச்சரியமானதல்லஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடு.

கடந்த 14 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டனர் அல்லது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Contact Us