லண்டன் புதரில் பிணமாக கிடந்த மரியா: கொலையாளியைக் கண்டு பிடித்த கில்லாடி பொலிசார் !

லண்டனில் கடந்த செவ்வாய் கிழமை அன்று ரோம்ஃபோர்ட், எசெக்ஸ் பகுதியில் இருக்கும் புதர்களின் இடையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மரியா ஜேன் ராவ்லிங்ஸ் என்ற 45 வயது பெண் தான் அது என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். பல நாட்களாக குற்றவாளி யார் என்று தெரியாமல், பொலிசார் தேடி வந்த நிலையில். திடீரென கிடைத்த ஒரு CCTV வீடியோவை வைத்து பொலிசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

அந்த பெண் கடந்த செவ்வாய் அன்று கிங் ஜார்ஜ் என்ற மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்றிருக்கிறார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தை நெரித்தும், தலையில் பலமாக அடித்தும் கொலை செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் மிகுந்த பாதிப்படைந்த மரியாவின் குடும்பத்தினருக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Contact Us