சலஞ்சர் 3 என்ற புதிய ரக டாங்கிகளை இணைத்த பிரிட்டன் – ரஷ்ய டாங்கிகளை அழிக்க வல்லவையாம் !

பிரித்தானியா சுமார் 800 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்து, தனது கவச வாகனங்களை மேல் நிலைப்படுத்தியுள்ளது. இந்த புதிய கவச வாகங்களுக்கு சலஞ்சர் 3 என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யா பாவித்து வரும் கவச வாகனங்களை குறிவைத்து அழிக்க வல்லவையாக இதனை தயாரித்துள்ளது பிரித்தானியா. இதேவேளை ரஷ்ய கவச வாகனங்களின் துப்பாக்கி மற்றும் பீரங்கிகளால் துளைக்க முடியாத கவசங்களை இது கொண்டுள்ளது என்பது சிறப்புத் தன்மையாகும்.

இரவிலும் பகலிலும் பார்க்க வல்ல பார்வை சாதனங்கள், நாட்டே என்று அழைக்கப்படும் புது ரக 120MM ஏவுகணை குண்டுகளை இது ஏவவல்லது. தானாக எதிரியை கண்டு பிடித்து தாக்கும் திறன். ஏற்படும் அபாயங்களை முன்கூட்டியே கண்டறியும் திறன் கொண்டவை என பல அம்சங்கள் இதில் அடங்குவதாக பிரித்தானிய ராணுவத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

Contact Us