வளர்ப்பு பாம்பை காணவில்லை: அசால்ட்டாக லெட்டர் எழுதி வைது அக்கம் பக்க நபர்களை கொடுமை படுத்திய நபர் !

எனது வளர்ப்பு பாம்புகள் 2ல் ஒன்றை காணவில்லை, அவை வீட்டை விட்டு தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை எழுதி அயலவர்கள் வீட்டு லெட்டர் பாக்ஸ் ஊடாக போட்டுள்ளார் ஒருவர். இதனால் அவரது வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் பலர் நிம்மதி இழந்து தவித்துள்ளார்கள். சிலர் தமது கார்டனுக்கு செல்லவில்லை. மேலும் சிலர் பாம்பை தமது வீட்டில் தேடி வருகிறார்கள். லண்டனில் இடம்பெற்ற இச்சம்பவத்தால், பல அயலவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சொல்லப் போனால் குறித்த பாம்புகள் விஷத் தன்மை கொண்டவை என்பது மேலும் நெஞ்சை பதறவைக்கும் செய்தியாக உள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள். பூனை தொலைந்து விட்டது, நாய் தொலைந்து விட்டது என்று வழமையாக லெட்டர் வரும். ஆனால் பாம்பு தொலைந்த விடையம் கவலை தருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Contact Us