யாழில் சில நாட்களுக்குள் ஒரு குடும்பமே அடுத்தடுத்து உயிரிழந்து அழிந்துபோன துயரம்!

யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து கணவன் உயிரிழந்ததை அடுத்து மனைவியும் அதே வழியில் தனது உயிரைத் மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலக பட்டறையில் நேற்று மாலை சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது 34), அவரது துணைவி ரஜிதா (வயது 33) ஆகிய இருவருமே உயிரை மாய்த்துள்ளளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை அயலவர்கள் கூறுவதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளன, அதில் குறித்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக பிள்ளை இல்லாத நிலையில், அண்மையில் குழந்தை பிறந்தாகவும், பிறந்த குழந்தை 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாததால் தந்தை நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் அதே நஞ்சை அருந்தி குழந்தையின் தாயும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us