“‘தோனி’ அந்த தப்ப பண்ணல.. மிரண்டு போன ‘முன்னாள்’ வீரர்!!

14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதன் காரணமாக, ஐபிஎல் தொடர்கள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

scott styris impressed by dhoni leadership in csk

முன்னதாக, இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் அடிப்படையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த சீசனில், 6 வெற்றிகள் மட்டுமே பெற்றிருந்த சென்னை அணி, 7 ஆவது இடம் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியிருந்தது.

இதன் காரணமாக, சென்னை அணியின் ஆட்டம், கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில், இந்த சீசனிலும் அவர்கள் சொதப்புவார்கள் என்றே அனைவரும் கருதினர். ஆனால், முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த சிஎஸ்கே, அதன் பிறகு தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது.

கடந்த சீசனில், தோனியின் கேப்டன்சி திறன், கடுமையான விமர்சனத்தை சந்தித்திருந்த நிலையில், இந்த சீசனில் தான் சிறந்த கேப்டன் தான் என்பதை தோனி (Dhoni) நிரூபித்துள்ளார். இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் (Scott Styris), சிஎஸ்கே அணி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

‘களத்திற்கு வெளியேயும் சரி, உள்ளேயும் சரி, தோனியின் கேப்டன்சியை பார்த்து நான் வியந்து போய் விட்டேன். கடந்த ஆண்டு செய்த தவறை இந்த முறை மீண்டும் செய்தால், சென்னை அணி மீண்டும் சொதப்பும் என்பதை தோனி நன்கு அறிந்திருந்தார். இதனால், அவர் அணியில் பல மாற்றங்களை செய்திருந்தார். ஒட்டு மொத்தமாக, மிகவும் ஸ்மார்ட்டாகவும் சென்னை அணி வீரர்கள் செயல்பட்டனர். சிறப்பாக திட்டமிட்டு அதனை சரியாக மேற்கொள்வதில், இந்த சீசனின் சிறந்த அணியாக சென்னை அணி விளங்கியது.

உதாரணத்திற்கு தீபக் சாஹர் – சாம் குர்ரான் என இரு பந்து வீச்சாளர்கள் கூட்டணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தது. தொடர்ந்து, மிடில் ஓவர்களில் எதிரணி வீரர்களை தடுமாறச் செய்து, இன்னும் விக்கெட்டுகளை எடுத்தார்கள். இருவரும் சேர்ந்து நல்ல கூட்டணியை உருவாக்கினார்கள் என்று நான் நினைக்கிறேன்’ என சிஎஸ்கே அணிக்கு, ஸ்காட் ஸ்டைரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, இந்த ஐபிஎல் சீசன் ஆரம்பமாவதற்கு முன்னர், சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் தான் பிடிக்கும் என்றும், பின்னர் சென்னை அணியின் ஆட்டத்தைக் கண்டு, தான் தப்பு கணக்கு போட்டு விட்டதாகவும், ஸ்டைரிஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us